2025 மே 23, வெள்ளிக்கிழமை

காட்டு யானைகள் அட்டகாசம்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 17 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, நொச்சிக்குளம் நெல் களஞ்சியசாலையில்  இவ்வருட பெரும்போக நெல் அறுவடை சேமித்து வைக்கப்பட்டிருந்த நெல் களஞ்சியசாலையை,  இன்று ஞாயிற்றுக்கிழமை (17) அதிகாலை காட்டு யானைகள் உடைத்து சேதமாக்கியதுடன், நெல்லையும் நாசமாக்கியுள்ளதாக விவசாய சங்கத்தின் தலைவர் எம்.ரமேஸ் கண்ணா தெரிவித்தார்.

குறித்த நெல் களஞ்சியசாலைக்கு காவலாளி ஒருவரை நியமித்துத் தருமாறு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரியப்படுத்தியும் இதுவரை எவரையும் நியமிக்கவில்லையொனத் விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளின் குற்றச்சாட்டை திருகோணமலை மாவட்ட நெல் சந்தைப்படுத்தல் பிரிவின் முகாமையாளரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது சிவில் பாதுகாப்பு பிரிவின் உதவியினை கேட்டுள்ளதாகவும் அவ்விடத்துக்கு காவலாளிகளை நியமிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X