2025 மே 23, வெள்ளிக்கிழமை

கோடாவுன் கைதானவர் பொலிஸ் பிணையில் விடுவிப்பு

Kogilavani   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை சம்பூர் கணேசபுரம் பகுதியில், கோடா 40ஆயிரம் மில்லி லீற்றருடன் கைதானாவரை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் இவரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை(22) நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.

வடி சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்படும் கோடா 40ஆயிரம் மில்லி லீற்றரை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தவராசா நவநீதன் (வயது39) என்பரை செவ்வாய்க்கிழமை(19)   சம்பூர் பொலிஸார் கைதுசெய்தனர்.

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியைச் சேர்ந்தவரே இதன்போது கைதுசெய்யப்பட்டார்.

குறித்த நபர், கணேசபுரம் பகுதியில் மறைவான இடமொன்றில் வடி சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற  தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தை சோதனையிட்ட போதே கோடா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X