Princiya Dixci / 2017 மார்ச் 25 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியாவில் அண்மைக்காலமாக பேசு பொருளாகக் காணப்படும் வைத்தியசாலை தரமுயற்றுதல் தொடர்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ் தொடர்பன ஒன்றுகூடல், தி/கிண்ணியா அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் நாளை (26) மாலை 4 மணிக்கு நடை பெறவுள்ளது.
டெங்குக் காய்ச்சல் காரணமாக கிண்ணியாவில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இவ் வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறை காணப்படுகிறது.
இது சம்மந்தமான இறுதிக்கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக வேண்டி உலமாக்கள், இளைஞர்கள், சிவில் அமைப்புக்கள், பொது நலன்விரும்பிகள், ஆசிரியர்கள், விளையாட்டு கழகங்க உறுப்பிர்கள் மற்றும் அரசியல் வாதிகள் அனைவரும் ஒன்று கூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா அபிவிருத்தி காணவேண்டும் என்ற ஆசையில் ஏமாற்றத்துடன் காத்திருக்கும் கிண்ணியா மண் மீது பற்றுள்ள ஒவ்வொருவரும் இவ்வொன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
26 minute ago
31 minute ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
31 minute ago
6 hours ago
7 hours ago