Gavitha / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா வலயக் கல்வி அலுவலக பிரிவில் சீருடைக்கான வவுச்சர்களுக்கு, சில வியாபாரிகள் தரமற்ற சீருடைத் துணிகளை வழங்கி வருவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதனால் தரமான சீருடைகளை வழங்குமாறும் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசுவர்கான் பகிரங்க வேண்டுகோளை விடுத்துள்ளார்.
சில வியாபாரிகள் தரமற்ற சீருடைக்கான துணிகளை வழங்குவதாக பெற்றோர்கள் முறையிட்டதையடுத்து, இந்த வேண்டுகோள் நேற்று சனிக்கிழமை (12) விடுக்கப்பட்டுள்ளது.
சீருடையின் சேர்ட்டுக்கு, ஜப்பான் டீசி வெள்ளை 65 கொட்டன் 35 பொலிஸ்டர் கொண்ட துணியாகவும் சீருடை காற்சட்டைக்கு ஜப்பான் டீசி வெள்ளை 65 கொட்டன், 35 பொலிஸ்டர் துணியாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் இது தொடர்பில் பெற்றோர் பரிசீலித்து துணிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளனர்.
தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பாக பெற்றோர்கள் பரிசிலித்து பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
10 minute ago
19 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
29 minute ago