2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கிண்ணியா விவசாயிகள் கவனயீர்ப்புப் போராட்டம்

Niroshini   / 2015 நவம்பர் 30 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஏழு விவசாயக் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று திங்கட்கிழமை கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேய்ச்சல் தரைக்கான ஒதுக்கீட்டை இடை நிறுத்து, விவசாயத்துக்கு உர மானியம் வழங்கு, விவசாயக் காணிக்கு அனுமதிப் பத்திரம் வழங்கு போன்ற  கோரிக்கைகளை முன்வைத்து இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பனிச்சங்குளம் மேற்கு, வாழைமடு, கல்லறப்பு, செம்புக்குளம், புளியங்குளம், சுன்டியாறு மற்றும் ஈரட்டைக்குளம் ஆகிய பிரதேச விவசாயிகள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதன்போது,சம்பவ இடத்துக்கு சென்ற கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

இதன்போது அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

விவசாயிகளையும் கால்நடை வளர்ப்பாளர்களையும் பாதுகாக்க வேண்டும்.இதற்காக கடந்த காலங்களில் இருசாராரையும் இணைத்துக் கொண்டு பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

இப்போது முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் மேய்ச்சல் தரை ஒதுக்கீட்டை நிறுத்துவதற்கோ விவசாயக் காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கோ என்னால் முடியாது.மேய்ச்சல் தரை ஒதுக்கீடானது அரசாங்க அதிபரின் உத்தரவுக்கு அமையவே இடம்பெற்றது.

காணி அனுமதிபத்திரம் என்பது அரச மட்டும் அரசியல் உயர்மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய விடயமாகும்.
இதேவேளை, விவசாயம் செய்யப்பட்ட காணிகளுக்கு உர மானியம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .