Niroshini / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்,பைஷல் இஸ்மாயில்
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் இன்று செவ்வாய்க்கிழமை தனிநபர் பிரேரணையை முன்வைத்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் 47ஆவது அமர்வு, தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே, இப்பிரேரணை முன்வைக்கப்பட்டு விவாதத்துக்கு விடப்பட்டு பின் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடந்து, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென்ற பிரேரணை தொடர்பிலும் இந்த அமர்வில் நடைபெற்ற விவாதம் தொடர்பிலும் உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்துவதாக தவிசாளர் சந்திரதாச கலப்பதி தெரிவித்தார்.
குறித்த பிரேரணை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் கருத்துத் தெரிவிக்கையில்,
சிறைச்சாலைகளில் எந்த விசாரணைகளுமின்றி பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை ஜனாதிபதி தனது மன்னிப்பின் மூலமே விடுதலை செய்யமுடியும் என்பதனால், இது சம்மந்தமாக நான் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளேன்.
விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும் என்றார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago