2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பதுர்தீன் சியானா, தீசான் அஹமட்

திருகோணமலை, புல்மோட்டைப் பிரதேசத்தில் 380 மில்லிகிராம் கேரள கஞ்சா வைத்திருந்த நபரை, இன்று திங்கட்கிழமை (08) அதிகாலை கைதுசெய்துள்ளதாக புல்மோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், புல்மோட்டை 04 வட்டாரத்தைச் சேர்ந்த எம்.எஸ்.எம். இக்பால் (வயது 39) எனவும் பொலிஸார்  தெரிவித்தனர்.

பொலிஸ் நிலையத்துக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த நபரைக் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபரை, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் புல்மோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .