2025 மே 16, வெள்ளிக்கிழமை

கேரள கஞ்சா வைத்திருந்தவருக்கு மறியல்

Gavitha   / 2017 மார்ச் 25 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எப்.முபாரக்

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், ஒரு கிலோகிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவரை, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு,  கந்தளாய் நீதிமன்ற நீதவான் நேற்று (24) உத்தரவிட்டார்.

கந்தளாய், வட்டுக்கச்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  

குறித்த சந்தேக நபர், ஒரு கிலோகிராம் கேரளா கஞ்சா பொதியை அனுப்புவதற்காக தயார் செய்து வைத்திருந்த நிலையில், பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபரை பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .