Niroshini / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
கடையொன்றினை உடைத்து ஒரு இலத்சத்து இருபதாயிரம் ரூபாய் பணம் மற்றும் அரிசி மூடைகள் போன்றவற்றைத் திருடிய ஒருவரை எதிர்வரும் 8ஆம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் திங்கட்கிழமை (30)உத்தரவிட்டார்.
சேருநுவர நகரில் அமைந்துள்ள சில்லறைக் கடையொன்றினை உடைத்து ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணமும் அரிசி மூடைகளும் இதர பொருட்களும் திருடப்பட்டதாக கடை உரிமையாளரால் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த சந்தேக நபரை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (29)கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த நபருக்கெதிராக மற்றொரு திருட்டு வழக்கும் நீதிமன்றில் தொடரப்பட்டிருப்பதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
6 minute ago
17 minute ago
24 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
24 minute ago
43 minute ago