Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
2016ஆம் ஆண்டு பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைக்கான கேள்விப்பத்திரம் கோர வேண்டாமென்று கிண்ணியாப் பிரதேசத்திலுள்ள சகல பாடசாலை அதிபர்களிடமும் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசூகர்கான் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை சகல பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், '2016ஆம் ஆண்டுக்கான பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை கேள்விப்பத்திரம் கோரல் தொடர்பாக திருத்தங்களுடன் கூடிய புதிய சுறு;றுநிரூபம் மத்திய அரசினால் வெளியிடப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். எனவே, 2016ஆம் ஆண்டு தங்கள் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைக்கான கேள்விப்பத்திரத்தை அறிவித்தல் வரும்வரை கோரவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 minute ago
20 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
30 minute ago