Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளரான சஜித் பிரேமதாஸவுக்கு நிபந்தனையற்ற முறையில் ஆதரவு வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவு, முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கும் தூரநோக்கம் கொண்ட வியூகமாகமென, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் கூறினார்.
இந்த வியூகத்தைச் சிலர் விமர்சித்தாலும் காலப்போக்கில் அதன் நன்மை முஸ்லிம் சமூகத்துக்குக் கிடைக்குமெனவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இன்று (1) அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், முஸ்லிம்களுக்கு எதிரான பெரும்பான்மை சக்திகள் சிலவற்றின் செயற்பாடுகள் காரணமாக முஸ்லிம் சமூகம் ஒரு வகையான பாதுகாப்பு சிக்கலை இன்று எதிர்நோக்கியிருப்பதாகவும் அந்தச் சிக்கலை நீக்கி, முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது முஸ்லிம் அரசியல் தலைமைகளின் பொறுப்பெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஹ்ரானின் குழுவால், நாட்டுக்குப் பிரச்சினை ஏற்படுத்தப்பட்டபோது, தமது தலைவர் ரவூப் ஹக்கீம் எடுத்த ஒரு தீர்மானத்தால் முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், ஜனாதிபதித் தேர்தலையும் முஸ்லிம்களின் எதிர்காலப் பாதுகாப்புக் கவசமாக மாற்றுவதற்கு ஹக்கீம் திட்டமிட்டுள்ளார் எனவும் அதற்காக அவர் வகுத்த வியூகம்தான் நிபந்தனைகளற்ற ஆதரவை, சஜித் பிரேமதாஸவுக்கு வழங்குவது என்ற தீர்மானமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
நிபந்தகளை விதித்திருந்தால் அது சிங்கள மக்கள் மத்தியில் எதிர்த்தரப்பால் பிழையாகத் திரிபுபடுத்திக் காட்டப்பட்டிருக்குமெனக் குறிப்பிட்ட அவர், முஸ்லிம்களின் பாதுகாப்பைத் தவிர, வேறு எதற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் நாம் தற்போது இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago