அப்துல்சலாம் யாசீம் / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெலு ஓயா பகுதியில் சட்டங்களை மீறி மணல் ஏற்றிய குற்றச்சாட்டின் பெயரில் சந்தேகநபர்கள் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், இன்று (15) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், நொச்சிகுளம், சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 38, 42 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மஹதிவுல்வெவ குலத்துக்கு மேலுள்ள நெலு ஓயா ஆற்றில் மணல் ஏற்றுவதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரத்தில் குறிக்கப்பட்டிருக்கின்ற சட்ட விதிமுறைகளை மீறி ஆற்றைத் தோண்டும் விதத்தில் செயல்பட்டு வந்த போது, அவர்களைக் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் எதிர்வரும் 14ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றில் ஆஜராகுமாறும் பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
14 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
58 minute ago
1 hours ago