Princiya Dixci / 2021 ஜூன் 30 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட்
கிண்ணியா பொலிஸ் பிரிவின் மணலாறு மற்றும் கண்டல் காடு ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர், இன்று (30) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்
நான்கு உழவு இயந்திரங்கள் மற்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றில் இவர்கள் சட்டவிரோதமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்த போது, பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்டனர் என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களையும், கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்கள் மற்றும் டிப்பர் ரக வாகனத்தையும் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் பாரப்படுத்த கிண்ணியா பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026