ஏ.எம்.ஏ.பரீத் / 2019 மார்ச் 27 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பகுதியில் அனுமதிக்கப்படாத வலைகளைப் பயன்படுத்தி, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், மீனவர்கள் 5 பேர், திருகோணமலை கடற்படையினரால், நேற்று (26) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான வலைகளைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட சுமார் 1,500 கிலோகிராம் மீன்கள், இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதோடு, இயந்திரப் படகொன்றும் இயந்திர மோட்டார்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளனவென, கடற்படையினர் தெரிவித்தனர்.
மேற்படி மீனவர்கள் ஐவரையும், மேலதிக நடவடிக்கைகளுக்காக, மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக, கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .