Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2018 நவம்பர் 15 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஆர்.எம்.றிபாஸ், அப்துல்சலாம் யாசீம்
சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கும் பொருட்டு, திருகோணமலை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர், இன்று (15) மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பதுடன், 3 உழவு இயந்திரங்களும் 2 டிப்பர் வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிண்ணியா, உப்பாறு மற்றும் சவாரிப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட இச்சுற்றிவளைப்பின்போது, கிண்ணியா மற்றும் தம்பலகாமம் பகுதிகளைச் சேர்ந்த 35, 38, 40 வயதுடையவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களுக்கு, மணல் ஏற்றுவதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்த போதிலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட விதிமுறைகளைப் பயன்படுத்தாமல் மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக, திருகோணமலை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றுவதைத் தடுப்பதற்கு விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பாக கிண்ணியா, மூதூர் பகுதிகளில் அதிகளவில் சுற்றிவளைப்புகள் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐந்து பேரையும், உழவு இயந்திரங்களுடனும் டிப்பர் வாகனங்களுடனும், கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் சந்தேகநபர்களை, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
39 minute ago
43 minute ago
56 minute ago