Freelancer / 2021 ஜூலை 01 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்.ஏ.ஹலீம்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல் காடு, மணல் ஆறு, நடுஊற்று ஆகிய பிரதேசங்களில் அனுமதிப்பத்திரமின்றி சட்டத்துக்கு விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஆறு நபர்கள் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர் என, கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எச்.சீ.கே. சமிந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதில் மூன்று நபர்கள் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிக் கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டதாகவும், மற்றைய மூவரும் மணல் அகழ்ந்து கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து கிண்ணியா பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இன்று (01) சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
M
5 hours ago
7 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
16 Nov 2025