Niroshini / 2015 நவம்பர் 03 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்,ஏ.எஸ்எம்.யாசீம்
திருகோணமலை நகரத்தில் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டு வந்த கட்டிடத்துக்கு தடையுத்தரவினை இன்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை உயர் நீதிமன்றம் விதித்துள்ளதாக திருகோணமலை நகர சபையின் வருமான பரிசோதகர் தட்சனாமூர்த்தி தெரிவித்தார்.
அனுமதியின்றி அமைக்கப்பட்டு வந்த கட்டட வேளைகள் குறித்து பொது மக்களும் நகரசபையும் திருகோணமலை உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து குறித்த தடையுத்தரவினை திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிபதி சசிமகேந்திரன் உத்தரவிட்டார்.
அனுமதியின்றி அமைக்கப்பட்டு வந்த கட்டிடத்துக்கு அருகாமையில் விபச்சார நடவடிக்கைகளும் மதுபாவனை செயற்பாடுகளும் நாளாந்தம் இடம்பெற்று வந்ததாகவும் தட்சனா மூர்த்தி தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago