Princiya Dixci / 2015 நவம்பர் 06 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நஹீம் முஹம்மட் புஹாரி
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் விறகு விட்டிய ஐவரையும் தலா 01 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்ததோடு, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி மீண்டும் ஆஜராகுமாறு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிவான், நேற்று வியாழக்கிழமை (05) உத்தரவிட்டார்.
குறித்த காட்டுப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் விறகு வெட்டி, அதனை மாட்டு வண்டிகளில் ஏற்றி வந்த நான்கு வண்டில்களின் உரிமையாளர்களையும் உதவியாளர் ஒருவரையும் சேர்த்து ஐவரை மூதூர் வனப்பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
மூதூர் வனப்பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து கைது செய்யப்பட்ட இவர்களை, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago