Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
திருகோணமலை மாவட்டத்தில்; சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை தமக்கு திருப்திகரமாக அமையவில்லை. எனவே, சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கையை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவுக்கும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் தலைமையிலான மீனவர் சங்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு, மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர், 'சட்டவிரோத மீன்பிடியை உடனடியாக நிறுத்த வேண்டுமென்பதுடன், சட்டவிரோத மீன்பிடி இடம்பெற்றால், அது தொடர்பில் தெரியப்படுத்துமாறு கோரியும் மாவட்டத்திலுள்ள மீனவர் சங்கங்களுக்கு கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார்.
மேலும், தங்களின் பிரச்சினைகளை தெரியப்படுத்தி அவற்றுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு மீன்பிடித் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை திருகோணமலை மாவட்ட மீனவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும் அரசாங்க அதிபர் கூறியதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் தெரிவித்தார்.
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026