Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை, கும்புறுப்பிட்டிக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதாக தமக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (27) மாலை சுற்றிவளைத்ததாகவும் இதன்போது, வலைகளையும் இரண்டு வள்ளங்களையும் சுமார் 200 கிலோ மீன்களையும் மீனவர்கள்; கைவிட்டு தப்பிச்சென்ற நிலையில், அவற்றை தாம் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கடற்பரப்பில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு, பொலிஸார் சென்ற வள்ளத்தில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரத்தை (இஞ்சினை) விடவும் மீனவர்களின் இயந்திரம் வேகம் கூடியது. இருப்பினும், இந்த மீனவர்களை பின்தொடர்ந்து சென்று இரக்கக்கண்டி கடற்கரையில் சோதனை செய்ய முற்பட்டபோதே, மீன்களையும் மீன்பிடி உபகரணங்களையும் கைவிட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026