Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 16 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஏ.எம்.ஏ.பரீத், எப். முபாரக், அப்துல்சலாம் யாசீம்
திருக்கோணமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழர்களுக்கு சொந்தமான பூர்வீக, வளமிக்க பாரம்பரிய நிலங்கள், தற்போதைய அரசாங்கத்தால் அபகரிக்கப்பட்டு வருவதாக, திருக்கோணமலை நகரசபைக்கான தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரும் முன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினருமான சி. நந்தகுமார் (நந்தன் மாஸ்டர்) தெரிவித்தார்.
மேலும், “உதைப்பது சப்பாத்து கால் என்பதற்காக, அதனை தொடர்ந்து முத்தமிட்டுக் கொண்டிருக்க முடியாது” எனவும் குறிப்பிட்டார்.
தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சார்பில் மூதூர் பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மூதூர் - மணற்சேனையில் பகுதியில், இன்று (16) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தமிழர்களின் நிலங்கள் வனஜீவராசிகள் வலயம் என்ற போர்வையிலும் உதாரணமாக சிம்பில்லா மலை வன ஒதுக்கு பிரதேசம், ஆண்டியாகலஹின்ன வன ஒதுக்கு பிரதேசம் என்ற போர்வையிலும் வர்தகமானியில் பிரசுரிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளன.
“முன்னைய அரசாங்கம் பயணிக்கும் பாதையிலேயே, இந்த அரசாங்கமும் இனவாத நோக்கில் செல்கிறது. இவ்வாறான இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு நன்மையளிக்கக் கூடிய புதிய அரசமைப்புக்கான இறுதி வரைபை எவ்வாறு முன்வைக்கும் என்பதை என் போன்ற பல்வேறு பாமரத் தமிழனும் எழுப்பும் வினாவாக தற்போதுள்ளது. எமக்கு துரோகம் செய்யும் இந்த அரசாங்கத்தை நாம் தொடர்ந்தும் பாதுகாப்பதில் அர்தமுமில்லை பயனுமில்லை” எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago