Editorial / 2020 ஜனவரி 09 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன், ஹஸ்பர் ஏ ஹலீம்
புதிய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவிருக்கும் அபிவிருத்தி தொடர்பில், திருகோணமலை மாவட்டச் சமூக அடிப்படையிலான கிராம அபிவிருத்தித் திட்ட (சப்பிரி கமக்) கூட்டம், திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் இன்று (09) நடைபெறவிருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.
நேற்றையதினம் நாடாளுமன்ற அமர்வு இருந்தமையின் காரணமாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் திங்கட்கிழமை (13) காலை 10 மணிக்கு இக்கூட்டம் நடைபெறமனவும் மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியிலும் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.
இதில் பிரதியமைச்சர் சுசந்த புஞ்சி நிலம, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்றத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
6 hours ago
7 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
24 Mar 2026