Editorial / 2020 ஏப்ரல் 12 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம், அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை மாவட்டத்தில் சஹன பியவர மற்றும் சஹன அருனலு திட்டம் மூலம் மொத்தமாக 54,999 சமுர்த்திக் பயனாளிகளுக்கு 27,49,95,000 ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக, திருகோணமலை மாவட்டச் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.
கொவிட் 19 அசாதாராண நிலை காரணமாக, அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட விசேட கொடுப்பனவுகளில் திருகோணமலை மாவட்டத்தில் சஹன பியவர மற்றும் சஹன அருனலு திட்டம் மூலம் இம்மாதம் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தமாக 54,999 சமுர்த்திப் பயனாளிகளுக்கு 27,49,95,000 ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக, மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
இதன்படி, சஹன பியவர திட்டம் மூலம் 36,342 பேருக்கு 18,17,10,000 ரூபாயும் சஹன அருனலு திட்டம் மூலம் 18657 பேருக்கு 9,32,85,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் 62,895 சமுர்த்தி பெறும் குடும்பங்கள் உள்ளதாகவும் இன்னும் 7,896 குடும்பங்களுக்கு குறித்த கொடுப்பனவு தொடராக 5,000 ரூபாய் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
7 hours ago
03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
03 Feb 2026
03 Feb 2026