2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சமுர்த்தி முத்திரைகள் பெறுகின்ற பயனாளிகள் மீளாய்வு

Editorial   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்,  ஹஸ்பர் ஏ ஹலீம்

பொருத்தமற்றவர்கள் சமுர்த்திப் பயனாளியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அதுபோல் பொருத்தமானவர்கள் தெரிவுசெய்யப்படவில்லை எனவும் மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக்கிடம்  பொதுமக்களால் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, பிரதேச செயலாளரின் பணிப்புரைக்கமைவாக,  மூதூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில், கடந்த இரண்டு வாரங்களாக மீளாய்வு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இம்மீளாய்வு நடவடிக்கைகளில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்மூலம், இவ்வாண்டுக்கான சமுர்த்தி முத்திரைகள் தகுதியுடையவர்களுக்கு வழங்க முடியும் முடியுமென்று, இம்மீளாய்வுக்காக பொதுமக்களினுடைய வீடுகளுக்கு வருகின்ற குழுவினர்களுக்கு, பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் மூதூர் பிரதேச செயலாளர் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X