2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சமுர்த்தி வீட்டுக்கான அங்குரார்ப்பணம்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள சமுர்த்தி திணைக்களம் ஊடாக புதிய வீட்டு நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் வைபவம் இன்று (24) நடைபெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதளுக்கிணங்க, குறித்த வீட்டுத் திட்ட நிர்மாணிப்புக்கான அங்குரார்ப்பண வைபவம்  நடைபெற்றது.

இதில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக், வங்கி முகாமையாளர் எம்.ஏ.ஹிஸ்புல்லா, திட்ட உதவியாளர் எம்.ஏ.எம்.நஜீப் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

மீரா நகர், சிராஜ் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் தலா ஆறு இலட்சம் ரூபாய் செலவில் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

சமுர்த்தி விசேட வீட்டுத் திட்டத்தின் கீழ், உரிய பயனாளிகளுக்கு இவ்வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X