2025 மே 14, புதன்கிழமை

சம்பூரில் மாவீரர் தினம்

தீஷான் அஹமட்   / 2017 நவம்பர் 26 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பூர், ஆலங்குளம் பகுதியில் அமைந்திருக்கும் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு ஈகைச் சுடரோந்தி, நாளை (27) மாலை 6.05 மணியளவில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக, திருகோணமலை மாவட்ட மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுச் செயலாளர் க.திருச்செல்வம் தெரிவித்தார்.

திருகோணமலையிலிருந்து சம்பூர் துயிலும் இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்துவதற்காக வேண்டி, விசேட பஸ் சேவையும் பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் மாவீரர் குடும்பத்தினர், புனர் வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னால் போராளிகள் ,தமிழ் உணர்வாளர்கள் ,பொது மக்கள் கலந்து கொண்டு தமது அஞ்சலியினை செலுத்த முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X