Kogilavani / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்
சம்பூர் சிறுவனின் மரணம் தொடர்பாக விசாரணை துரிதப்படுத்தப்பட வேண்டும் என திருகோணமலை பெண்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தைச் சேர்ந்த நாட்டின் ஆய்வு அதிகாரி அண்டரியாஸ் சூமிட்டின் மற்றும் குடியேற்றத்துக்கான முதன்மை செயலாளர் ஆகியோர் திருகோணமலை பெண்கள் அமைப்புகளைச் சந்தித்து நாட்டின் தற்போதைய நிலவரம் பற்றிய கலந்துரையாடலில் இடுபட்டனர்.
திருகோணமலை, இராஜவரோதயம் வீதியில் உள்ள விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, நாட்டின் தற்போதைய நிலவரம் மற்றும் இன்றும் நாட்டில் உள்ள பெண்களுக்கு அச்சுருத்தல் நிலவுகின்றனவா? போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
இதன்போதே மேற்படி பெண்கள் இக்கோரிக்கையை முனவைத்துள்ளனர். இங்கு தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர்கள்,
நாட்டில் பெண்கள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான விசேட நிவாரண செயற்திட்டம் இல்லாதது வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கி உள்ளதாக தெரிவித்தனர்.
கடந்த கால யுத்தத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்மந்தப்பட்ட குடும்பத்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கான அச்சுருத்தல் இனறும் தொடர்வதாக தெரிவித்தனர்.
தற்போது சிறுவர், சிறுமியருக்கு எதிராக பல்வேறு துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பூர் சிறுவனின் மரணம் தொடர்பாக விசாரணை துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் எனவும் தெரிவித்தனர்.

3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago