2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

சர்வதேச நீதி கோரிய போராட்டம் திருகோணமலையிலும் ஆரம்பம்

Princiya Dixci   / 2021 மார்ச் 15 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீட், அ.அச்சுதன்

திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர், திருகோணமலை சிவன் கோவில் முன்றலில் இன்று (15) உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தங்களுக்கு சர்வதேச நீதி வேண்டியே இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை தாம் ஆரம்பித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர். 

“அரசியல் கைதிகளை விடுதலை செய்”, “சிறந்த தீர்வை ஐக்கிய நாடு பெற்றுத் தா”, “சாகும் வரை உண்ணா விரதம்”, “காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே?” போன்ற சுலோகங்களை அவர்கள் ஏந்தியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X