Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Niroshini / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
கிழக்கு பல்கலைகழகத்தின் திருகோணமலை வளாகத்தினால் நிலையான பிராந்திய அபிவிருத்திக்கான அறிவுத்தேடல் எனும் முதலாவது சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம், 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக கிழக்கு பல்கலைக் கழகத்தின் திருகோணமலை முதல்வர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைகழகத்தின் திருகோணமலை வளாக கேட்போர் கூடத்தில் இன்று (18) பிற்பகல் 4 நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இவ்வாய்வு மாநாட்டின் பிரதான நோக்கமானது தேசிய மற்றும் சர்வேதேச ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்துவதற்கு களம் அமைத்துக்கொடுப்பதும் மேலும் நமது பிராந்திய அபிவிருத்திக்கான தர்க்க ரீதியான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் உள்வாங்கிக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பை அமைத்துக்கொடுப்பதுமாகும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.
இதில், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - மருத்துவமும் சுகாதார வின்ஜானமும் - மொழியும் மொழியியலும் - முகாமைத்துவமும் பொருளியலும் எனும் தலைப்புக்களில் ஆய்வுக்களங்கள் இடம்பெறவுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago