2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சவாரிக்குத் தயார்; முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2019 ஜனவரி 29 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மட்டிக்கழி  கடல் ஏரிப் பூங்காவுக்கு அருகிலுள்ள ஏரியில், மிதிபடகு சவாரி சேவையை அமுல்படுத்த நகரசபை தீர்மானித்துள்ளது .

இந்த மட்டிக்கழி கடல் ஏரிப் பூங்கா ஆழம் குறைந்த, அலை இல்லாத ஓர் இடமாகும். இவ்விடம், சவாரி செய்வதற்குப் பாதுகாப்பான, பொருத்தமான இடமாகக் காணப்படுவதால், இத்திட்டத்துக்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான தற்காலிக இறங்குதுறை, கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம், கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை, பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் அனுமதியுடன் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தைச் செயல்படுத்த விரும்பும் முதலீட்டாளர்கள், நகரசபையிடம் தொடர்புகொண்டு, விடயங்களை அறிந்துகொள்ளலாம் எனவும், முதலீட்டாளர்கள், நகரசபையின் நிபந்தனைக்கு ஏற்ப, தமது கேள்வியை சமர்ப்பிக்கும் பட்சத்தில், சபையில் அது பரிசீலிக்கப்பட்டுப் பொருத்தமான முதலீட்டாளரிடம், நிபந்தனைக்கு அமைய வழங்கப்பட்டவுள்ளதாக, திருகோணமலை நகரசபை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X