Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜனவரி 26 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார், ஹஸ்பர்
திருகோணமலையில் வெகுஜன ஊடக டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நேற்று (25) நடைபெற்றது.
அகம் மனிதாபிமான வள நிலையத்தின் நிதி அனுசரணையுடன், எழுத்தாணி கலைப் பேரவையால் நடத்தப்பட்ட இந்த டிப்ளோமா கற்கை நெறியின் கற்பித்தல் நடவடிக்கைகளை, கிழக்கு மாகாணத்தில் ஊடகக் கற்கைநெறியை நடத்தி வரும் வொய்ஸ் ஒவ் மீடியா நெட்வோர்க், ஊடக வளங்கள் மற்றும் ஆய்வுகளுக்கான நிலையம் நடத்தியது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களை அதிகமாக கொண்ட 08 பிரதேச செயலகப்பிரிவகளில் உள்ள 30 தமிழ் மொழி மூலமான இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு நடத்தப்பட்ட இந்தக் கற்கை நெறியில் 23 பேர் இப்பயிற்சி நெறியை நிறைவு செய்து, சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்;.
இந்நிகழ்வில், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன், திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் சி. சிறிதரன், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் க.லவகுசராசா, எழுத்தாணி கலைப் பேரவையின் தலைவர் வடமலை ராஜ்குமார், வொய்ஸ் ஒவ் மீடியா நெட்வோர்க், ஊடகக் கற்கைகளுக்கான நிறுவகத்தின் இயக்குநர் அருள் சஞ்சித் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
59 minute ago
1 hours ago
7 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
7 hours ago
19 Sep 2025