2025 மே 02, வெள்ளிக்கிழமை

‘சிறுபான்மை சமூகத்தின் உறவே அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்கும்’

ஒலுமுதீன் கியாஸ்   / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் - முஸ்லிம் சமூகத்தின் பலமான உறவே அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்குமென, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் எச்.எம்.எம். பாயிஸ் தெரிவித்தார்.

 

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி மற்றும் ஈச்சந்தீவு ஆகிய கிராமங்களில்  ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் பெருநாள் நிகழ்வு, நேற்று (12) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசியல் சூழ்ச்சிகளுக்கும் சுயநலன்களுக்கும்  அப்பால்  கிழக்கு மாகாண  தமிழ், முஸ்லிம்  சமூகங்களுக்கிடையில் ஆரம்ப காலத்தில் காணப்பட்ட  நல்லிணக்கமும்  புரிந்துணர்வும் மீளவும்  கட்டியெழுப்படுமாக இருந்தால், பலமான அரசியல் சக்தியென்றைத் தென்னிலங்கைக்கு எடுத்துக்காட்ட முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலில்  தேசிய அரசியல்வாதிகளால் அரசியலில் நாங்கள் அடையாளப்படுத்தப்படுவதற்கும் அது வாய்ப்பாக  அமையுமெனவும் முன்னாள் தவிசாளர் தெரிவித்தார்.

தமிழ் - முஸ்லிம் மக்களின் புரிந்துணர்விலும் சகவாழ்விலும் தான் கிழக்கு மாகாணம் சுபீட்சம் காண முடியும் என்பதை ஆரம்ப கால வரலாற்றுச் சம்பவங்கள் இன்றும்  சான்று பகர்கின்றன எனவும் அப்படிப்பட்ட உறவு வெறும் அரசியலுக்காக சிலரால் இன்று சீரழிக்கப்படுவது கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .