2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சிறுமி மீது துஷ்பிரயோகம்: 7 வருட கடூழிய சிறை

Editorial   / 2019 ஜூலை 10 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

 மனைவியின் முதல் கணவரின் நான்கு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்குமாறு திருகோணமலை  மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில்  கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட  போதே உத்தரவிட்டார்.

இவ்வாறு கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளவர் சேருநுவர சிரிதுவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிதுவ பகுதியில் தன் மனைவியின்  முதல் கணவருடைய நான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிர யோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு எதிராக வழக்கு இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் இவ் வழக்கு   விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நான்கு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மைக்காக 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் மூவாயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும் அப்பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு மாத கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை ,பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .