2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சீனாவிடமிருந்து ரூ. 18 மில். நிதியுதவி

Editorial   / 2019 மே 05 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல் சலாம் யாசீம்

 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பாதிக்கப்பட்ட மக்களின் அவசரத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு, சீனத் தூதரகத்தினால், 18 மில்லியன் ரூபாய் பெருமதியான நிதியுதவி வழங்கப்பட்டதாக, அச்சங்கத்தின் தேசிய செயலாளர் எஸ்.எச்.நிமல் குமார் தெரிவித்தார்.

சீனத் தூதரகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி செக் சுவேயுவான் (CHENG XUEYUAN) மற்றும் நிமல் குமார் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, நேற்று (05) காலை, சீனத் தூதரகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, சீனாவினுடைய செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய காசோலையை, இலங்கைக்கான பிரதிநிதி வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .