2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் இ.தொ.காவுடன் சந்திப்பு

Freelancer   / 2023 மே 25 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கியாஸ் ஷாபி

செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் ஹெலிஸ்கா ஷிகோவா (Eliška Žigová), இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்டக் குழுவினருடன் நேற்று (24) சிநேகபூர்வ கலந்துரையாடலை நடத்தினார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைக் காரியாலயமான சௌமிய பவனில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.  

இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன் மற்றும் இ.தொ.காவின் உயர்மட்டப் உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பில் மலையகம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் பொருளாதார மேம்பாடு குறித்து பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X