அப்துல்சலாம் யாசீம் / 2019 ஜனவரி 23 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட கிளையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பயிற்சிப் பாசறை, எதிர்வரும் 24ஆம், 25ஆம், 26ஆம் நாள்களில் நடைபெறவுள்ளதாக, திருகோணமலை மாவட்டக் கிளையின் நிறைவேற்று அதிகாரி எஸ். சுஜீவன் தெரிவித்தார்.
இப்பயிற்சிப் பாசறை, திருகோணமலை, செல்வநாயகபுரத்தில் அமைந்துள்ள பிராந்திய பயிற்சி நிலையதில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவசரகால நிலைமையின் போது, எவ்வாறு ஒரு முன்னெச்சரிக்கையாக சில ஏற்பாடுகளை மேற்கொண்டு, அந்த நிலைமைகளைக் கையாள்வது பற்றிய அறிவுறுத்தல்கள் இதன்போது வழங்கப்படவுள்ளன.
இப்பயிற்சிப் பாசறைக்கென, திருகோணமலை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 35 பேர் அங்கம்வகிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .