Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜூன் 17 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட்
"முழுமையான சேதனைப் பசளைக் கொண்ட வேளாண்மையாக இலங்கையை மாற்றுவதற்கான முடிவு, நாட்டை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு மனிதாபிமான முடிவு” என்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத் தெரிவித்தார்.
சிலரின் கருத்துப்படி, அது அரசியல் நிகழ்ச்சி நிரல் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் செயற்கை பசளை வேளாண்மையை நடைமுறைப்படுத்துவதற்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடலொன்று, திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (16) நடைபெற்றது.
இதன்போது விசேட உரையாற்றுகையிலேயே அளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், "கிழக்கு மாகாணத்தில், கடந்த சில பருவங்களில் பெரும் சவால்களுக்கு மத்தியில் செயற்கைப் பசளைக் கொணடு நெல் வளர்ப்பதில் நாங்கள் மிகவும் பிடிவாதமாக இருந்தோம்.
“எனினும், இந்த நாட்டை விஷம் இல்லாத தீவாக மாற்ற, கிழக்கு மாகாணத்திலிருந்து புதிய பயணத்தைத் தற்போது தொடங்கியுள்ளோம்.
“இரசாயன உர பயங்கரவாதத்தை ஒழிக்க, ஜனாதிபதி எடுத்த முடிவு மிகவும் மதிப்புமிக்கது.
“எனவே, அதிகாரிகள் என்ற வகையில், ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட நடவடிக்கையை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago
3 hours ago