2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சேருவிலவில் காட்டு யானை இறப்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 24 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டு யானையொன்று, இறந்த நிலையில் இன்று (24) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த காட்டு யானை, இனந்தெரியாதோரால் கட்டுத்துவக்கினால் சுடப்பட்டு இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த யானை, கவன்திஸ்புர கிராம சேவகர் பிரிவில் உள்ள வயற்காணி ஒன்றில் விழுந்து இறந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவ இடத்துக்கு வருகைதந்த வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் அதனை பார்வையிட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .