2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சோளச் செய்கையில் பாரிய வீழ்ச்சி

Editorial   / 2021 டிசெம்பர் 09 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மஜீத் நகர் வெல்லாங்குள சோளச் செய்கையில் இம்முறை பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக, செய்கையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

போதிய பசளை இன்றி காரணமாக சோளச் செய்கை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தங்களது வாழ்வாதாரமாக சோளச் செய்கையை நம்பியே வாழ்ந்து வருவதாகவும் செய்கையாளர்கள் தெரிவித்தனர்.

பல இலட்சம் ரூபாய் முதலீடு செய்து செய்கையில் ஈடுபட்ட போதும் உரிய பயன் கிடைக்கவில்லை. இதனால் பாரிய பொருளாதார பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ளோம் எனவும் சோளச் செய்கையாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

எனவே, தங்களுக்கான நட்டஈட்டை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X