Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Yuganthini / 2017 மே 21 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன்ஆனந்தம்
“கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் உள்ள சித்த வைத்தியப் பிரிவை, தனியான பூரணத்துமிக்க பீடமாகத் தரமுயர்த்த வேண்டும். இதற்கு, பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் முடியுமான பங்களிப்பை வழங்கியுதவ வேண்டும்” என, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக முதல்வர் கலாநிதி வி.கனகசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருகோணமலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடிகளிலான நுாலகக் கட்டடத்தொகுதியைத் திறந்துவைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதல்வர், “2008ஆம் ஆண்டிலிருந்தே, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில், சித்த வைத்தியப் பிரிவொன்று இயங்கி வருகின்றது. அதற்காக இந்திய அரசாங்கம், மில்லியன் கணக்கான ஆய்வு உபகரணங்களை வழங்கியிருந்தது. இந்த உபகரணங்கள், நாட்டின் எங்கும் கிடைக்கப்பெறாதவையாகவும் எந்த உயர்கல்வி நிறுவனங்களிலும் காணப்படாதவையாகவும் உள்ளன. இவ்வாறான பெறுமதிவாய்ந்த உபகரணங்கள், முறையாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. எதிர்காலத்தில் பல ஆய்வுகளுக்கும் நாம் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago