2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

செயலமர்வு

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

அனல் மின்சார நிலையத்தினால் ஏற்படும் அபாயம் சம்பந்தமான செயலமர்வு, நாளை சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு மூதூர் சேப் ரெஸ்ட் மண்டபத்தில்  இடம்பெறவுள்ளது.

மூதூர் பசுமைக்குழுவோடு இணைந்து நௌபால்தீன் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்துள்ள இச்செயலமர்வில்  சமூக நலனில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளமுடியுமென மன்றத்தின் தலைவர் எம்.ஐ. நௌபால்தீன்  தெரிவித்தார்.
மூதூர் செயலகப் பிரிவில் சம்பூர் பகுதியில் அமைக்கப்படவுள்ள அனல் மின்சார திட்டத்துக்கு எதிராக பத்து அமைப்புக்கள் இணைந்து ஏற்படுத்திக் கொண்ட மூதூர் பசுமைக்குழு அமைப்பில் நௌபால்தீன் நற்பணி மன்றமும் முக்கிய பங்கெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .