2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சிரமதானத்துக்கு வராதோரிடம் பணம் அறவிடப்படும்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 01 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்எம்.யாசீம்

திருகோணமலை, ரொட்டவெவக் குளத்தின் சிரமதானப் பணியில் கலந்துகொள்ளாத விவசாயிகளிடமிருந்து 500 ரூபாய் அறவிடப்படவுள்ளதாக ரொட்டவௌ விவசாயச் சங்கத்தின் தலைவர் எஸ்எம்.பைசர் தெரிவித்தார்.

திருகோணமலை, ரொட்டவௌ விவசாயச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை  குளத்தின் இரு பக்கங்களையும் சுத்தப்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டது.

சங்கத்தில் அங்கத்துவம் பெற்ற அனைவரும் சிரமதானத்தில் பங்குபற்றுமாறு பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டும்  குறைந்தளவானோரே சிரமதானம் செய்த வந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .