2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

சிரேஷ்ட பிரஜைகள் தினம் அனுஷ்டிப்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                    

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் தினம் இன்று வியாழக்கிழமை (8) திருகோணமலை நகர மண்டபத்தில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.           

இதன்போது,திருகோணமலை மாவட்டத்திலுள்ள பதினொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட சான்றோர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.                  

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன், கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் கருணாகரன்,திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்தியர் பிரதீபா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .