2025 ஜூலை 23, புதன்கிழமை

சிறுமி கொலை: சந்தேக நபரை சிறுவர் இல்லத்தில் வைக்க உத்தரவு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட்

நல்லூர், நீலாங்கேணிக் காட்டுப்பகுதியில் 06 வயதுச் சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள 16 வயதுச் சிறுவனை மேலும்  ஜனவரி 12ஆம் திகதிவரை அவ்வில்லத்தில் வைக்குமாறு மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவிட்டார்.  

கடந்த செப்டெம்பர் 08ஆம் திகதி வீட்டு முற்றத்தில் விளையாடிய நீலாங்கேணியைச் சேர்ந்த ஜெஹதீஸ்வரன் அஜந்தா என்ற சிறுமி காணாமல் போன நிலையில் பொலிஸில் பெற்றோர் முறைப்பாடு செய்தனர். பொலிஸாரின் உதவியுடன் தேடியபோதே, சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.

இது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த இச்சிறுவனை நேற்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே, மேற்படி உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .