2025 மே 19, திங்கட்கிழமை

சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட், ஏ.எம்.ஏ. பரீத்

தி/ கிண்ணியா காக்காமுனை செம்புக்குளம் வித்தியாலயத்தின் சுற்று மதிலுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம், நேற்று 18 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, ஒதுக்கப்பட்ட 200,000 ரூபாயிலிருந்தே, சுற்றுமதில் கட்டப்படவுள்ளது.

கிண்ணியா பிரதேச சபையின் முன்னால் உதவி தவிசாளர் கே.எம்.நிஹாரின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் மாணவர்களின் குறை நிறைகளும் கேட்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X