Niroshini / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
ஜனாதிபதி,பிரதமர் மட்டுமன்றி எதிர்க் கட்சித் தலைவரும் நல்லாட்சியின் கூடிய ஜனநாயகத்தை இந்த நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என செயற்பட்டு வருகின்றனர்.அதுபோல், உள்ளூர் மட்டத்தில் உள்ள அமைப்புக்களும் செயற்பட வேண்டும் என இளைஞர் அபிவிருத்தி அகத்தின் மதியுரைஞர் பொ.சற்சிவானந்தம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்த நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதிக்கு பின்னர் நல்லாட்சி ஜனநாயகம் பற்றிய கருத்தியல்கள் அதிகமாக பேசப்படும் விடயமாக உள்ளது.
நாட்டின் அரசியல் அமைப்புக்களில் அவ்வாறான முக்கியமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ கிராம மற்றும் பிரதேச மட்டங்களிலும் உள்ள அமைப்புக்களிலும் ஜனநாயகத்துடன் கூடிய நல்லாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும்.
கிராம மட்டத்திலும் சரி மாவட்ட மட்டத்திலும் சரி மக்களுக்கு சேவை செய்ய வந்த பல தலைவர்கள் அவ்வமைப்புக்களின் சேவைகள் பரந்து பட்டளவில் மக்களைச் சென்றடைவதற்கு தடைக்கற்களாக இருக்கின்றனர்.இதனால் கிராமத்துக்கோ நகரத்துக்கோ அந்த அமைப்புக்களால் செய்ய வேண்டிய சேவை மறைமுகமாக தடுக்கப்படுகின்றது.
ஆகவே, நாட்டில் உண்மையான ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி ஏற்படுத்தப்படும் அதேவேளை கிராமங்களிலும் நகரங்களிலும் இந்த நல்லாட்சி, ஜனநாயாக உயர் விழுமியங்கள் ஏற்படத்தப்பட வேண்டும் என்றார்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026