Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 31 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத், ஏ.ஆர்.எம்.றிபாஸ், அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட், எப்.முபாரக்
அபிவிருத்தித் திட்டங்களுக்கு, ஜனாதிபதி மீண்டும் தடை ஏற்படுத்தின், ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறுமென, ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
கிண்ணியாவில் நேற்று (30) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களாகிய தாம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முதலில் நன்றி கூறவேண்டுமென்றும் கடந்த ஐம்பது நாள்களாக அரசமைப்புக்கு மாறாக இவர்கள் செய்த வேலைகளால் தமது கட்சியின் பலம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தூங்கிகொண்டிருந்த யானைகளை இவர்கள் தட்டி எழுப்பி விட்டார்கள் என்று தெரிவித்த அவர், கடந்த மூன்று வருடங்களாக நல்லாட்சி என்ற பெயரில் மஹிந்தவின் விசுவாசிகளே அமைச்சர்களாக இருந்தனர் என்றும் இவர்களே நல்லாட்சியின் செயற்பாடுகளுக்குத் தடையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.
இவ்வாறான நிலை, நாடு முழுவதும் காணப்பட்டதால் மக்களுக்குத் திருப்திகரமான சேவையை செய்யத் தம்மால் முடியாமல் போனதாகவும் தற்போது ஐக்கிய தேசிய முன்னணியின் தனி அரசாங்கம் அமைக்கப்பட்டு, தமக்கு எதிராகச் செயற்பட்ட கறுப்பாடுகள் துரத்தப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.
ஜனவரி மாதத்தில் இருந்து நாடு முழுவதும் பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்ட இம்ரான் எம்.பி, இப்பணிகளுக்கு ஜனாதிபதி தடைகளை ஏற்படுத்தால் அடுத்த வருடம் முதலில் நடைபெறுவது ஜனாதிபதித் தேர்தலாகவே இருக்குமென உறுதிபடத் தெரிவித்ததுடன், ஜனாதிபதித் தேர்தலை நடத்தி, ஐ.தே.கவின் ஜனாதிபதியைக் கொண்டு, அபிவிருத்திகளை முன்னெடுப்போம் என்றார்.
4 hours ago
17 Aug 2025
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
17 Aug 2025
17 Aug 2025