Princiya Dixci / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், அ.அச்சுதன்
திருகோணமலை-ஜமாலியா பகுதியில் மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
இறைச்சி கடையுடன் தொடர்புடைய குறித்த நபர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஜமாலியா பகுதியில் இம்மாதம் 20ஆம் திகதி 15 பேர் இனங்காணப்பட்ட நிலையில் நேற்று (21) மேற்படி 7 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 47 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர் எனவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
அதேவேளை, ஜமாலியாவில் 04 பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்விகற்ற அனைத்து மாணவர்களையும் இன்று (23) பிசிஆர் பரிசோதனை செய்யுமாறு, சுகாதார அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago