Niroshini / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி
தோப்பூர்-ஜின்னாநகர் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதகக் கூறப்படும் உயிரிழந்த இளைஞனின் மைத்துனரை நேற்று கைதுசெய்த மூதூர் பொலிஸார் அவரிடமிருந்து ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.
குறித்த இளைஞனை பொலிஸார் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்தமைக்கமைய இன்று புதன்கிழமை அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றும் ரீ-56 ரக துப்பாக்கி ரவைகள் ஆறும் மாவிலாறு காட்டுப் பகுதிக்குள் குறித்த நபர் மறைத்து வைத்திருந்த கட்டுத் துவக்கு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் தொடர்ந்தும் மூதூர் பொலிஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026