2025 மே 15, வியாழக்கிழமை

ஜெலிக்னைட் குச்சிகளுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா, பொதுப் பிரதேசத்தில் ஜெலிக்னைட் குச்சிகளைத் தன்வசம் வைத்திருந்த சந்தேகநபரை, கடற்படையினர், திங்கட்கிழமை (17) கைதுசெய்துள்ளனர்.

கடற்படையினருக்குக் கிடைக்கபெற்ற இரகசியத் தகவலையடுத்தே, திருகோணமலை குற்றப்புலனாய்வு அதிகாரிகளுடன் இணைந்து சுற்றுவளைப்பை மேற்கொண்டு, குறித்த சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்த 7.425 கிலோகிராமுடைய 55 ஜெலிக்னைட் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி மீட்கப்பட்ட ஜெலிக்னைட் குச்சிகளை, முச்சக்கர வண்டியில் ஏற்றிச் செல்லும் போதே, சந்தேசகநபரைக் கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .